“மலையக இளைஞர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் முடிந்தால் அவர்களை பிரித்துக்காட்டுங்கள்”

“மலையக இளைஞர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் முடிந்தால் அவர்களை பிரித்துக்காட்டுங்கள்”

“ மலையகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், இ.தொ.கா.வுக்கும் உள்ள உறவை பிரிப்பதற்குரிய சதி திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது. எனவே, இளைஞர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எட்டியாந்தோட்ட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ பெருந்தோட்ட பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மாத்திரம் அட்டை மற்றும் பாம்பு கடிகளுக்கு தொடர்ந்தும் இலக்காகி வருகின்றனர். தோட்டத்தில் உள்ள தாய் , தந்தையர்கள் தோட்ட பகுதியில் தொழில் புரிந்தால் அவர்களது பிள்ளைகளும் தோட்ட பகுதியிலயே தொழில் புரியாவிட்டால் அவர்களை வெளிநபர் என முத்திரை குத்துகிறார்கள், அதனை தட்டி கேட்டால் தவறு என கூறுகிறார்கள். மலையக இளைஞர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் முடிந்தால் அவர்களை பிரித்துக்காட்டுங்கள்.

மலையகத்தில் உள்ள முன்னாள் அமைச்சருக்கு பொறிமுறை பற்றிகூட பேசதெரியவில்லை.இவர்கள் நேரத்திற்கு ஏற்றவாறு மாறிகொண்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )