நுவரெலியா மாவட்டத்தில் குறைவான தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் குறைவான தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

நுவரெலியா மாவட்டத்தில், மிகக் குறைவான தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், தற்பொழுது அவை தொடர்பான விசாரணைகள் இடம்
பெற்று வருவதாகவும், நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர், “2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்டத்தில், 19 ஆயிரத்து 747 தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வாக்காளர்கள் நேற்று முன்தினம் முதல், நுவரெலியா மாவட்டம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள இருநூறு வாக்களிப்பு நிலையங்களில், தங்களின் வாக்குகளை பதிவு செய்கின்றனர். தபால் மூல வாக்களிப்பு பணிகளுக்காக, 120 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நிலைமையை பேணுவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும், ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை, மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள், நுவரெலியாவில் மிகக் குறைவாக பதிவாகியுள்ளது. நுவரெலியா தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு, ஏழுமுறைப்பாடுகளே பதிவாகியுள்ளன.கடுமையான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைக்கப் பெற்ற அனைத்து முறைப்பாடுகளும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன” தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )