தினமும் எத்தனை கோப்பி குடிக்கிறீர்கள் ?

தினமும் எத்தனை கோப்பி குடிக்கிறீர்கள் ?

நம்மில் பலருக்கு நன்றாக வேலை செய்வதற்கு உந்துதலாக இருப்பது கோப்பி.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட காலையில் ஒரு தடவை மதியம் ஒரு தடவை இரவு ஒரு தடவை என ஒரு நாளைக்கு பத்து கோப்பிகள் வரையில் குடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

நாம் குடிக்கும் கோப்பியில் உற்சாகம் மட்டுமல்ல உயிர் ஆபத்தும் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை.

டெல்லியில் அமெரிக்கன் கல்லூரி இதயவியல் துறையில் இடம்பெற்ற கருத்தரங்கில் தினமும் நான்கு கோப்பிகள் குடிப்பதே இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு நாம் பருகும் 400மில்லி கோப்பி, பாராசிம்பேடிக் எனும் அமைப்பை தொந்தரவு செய்யக்கூடிய வாய்ப்புள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும்.

அதிகமாக தேநீர், கோப்பி, குளிர்பானங்கள் குடிக்கும் 18 வயது முதல் 45 வயதுடையவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அவர்களில் பலருக்கு இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு பிரச்சினை போன்றன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )