உக்ரேன் வெளியுறவு மந்திரி திடீர் இராஜினாமா

உக்ரேன் வெளியுறவு மந்திரி திடீர் இராஜினாமா

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரேன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் இராஜினாமா செய்துள்ளனர்.

ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.

அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, பாராளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரியான டிமிட்ரோ குலேபா தனது பதவியை இன்று திடீரென இராஜினாமா செய்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய மந்திரிகள் இராஜினாமா செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )