புதிய அரசியல் கூட்டணி இன்று உதயம்!

புதிய அரசியல் கூட்டணி இன்று உதயம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருந்தொகையான பிரதிநிதிகளின் பங்கேற்புடன், அரசியலில் புதிய திசையை நோக்கிய பரந்த புதிய அரசியல் கூட்டணியின் அறிமுகம் இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த கூட்டணி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த கூட்டணியை கட்டியெழுப்புகின்றனர். எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணியை தொடங்குவதே இலக்கு எனவும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )