அஞ்சல் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று !

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று !

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று ஆரம்பமான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை (06) வரையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான, இன்று முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாளைய தினம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.

இதுதவிர, முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )