பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகுகிறேன்: எம்பாப்வே

பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகுகிறேன்: எம்பாப்வே

பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்வே பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

25 வயதான இவர் பிரான்ஸ் நாட்டின் லீக்-1ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

நீண்ட காலமாக பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மெட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.

ஆனால் கிலியான் எம்பாப்வே தொடர்ந்து பிஎஸ்ஜி அணிக்காகவே விளையாடி வந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 பருவக்காலத்துடன் பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவது பிஎஸ்ஜி அணிக்காக தனது கடைசி ஆட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிலியான் எம்பாப்வே பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்களை பதிவுசெய்துள்ளார்.

2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்கள் அடித்தார்.

2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

எம்பாப்வே 2015 முதல் 2018 வரை மொராக்கோ அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 41 கோல்களை பதிவுசெய்துள்ளார்.

2017-18-ல் லோன் மூலம் பிஎஸ்ஜி அணியில் அறிமுகம் ஆனார்.

அதில் இருந்து தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )