பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற கர்ப்பிணி
பாரிஸ் பராலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
7 மாத கர்ப்பிணியான அவர், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த சக நாட்டு வீராங்கனையான பேட்டர்சனை வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதன் மூலம் விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை தொடரில் படைத்துள்ளார்