12 வருடமாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்கும் நபர்

12 வருடமாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்கும் நபர்

சீரான மனநிலையைப் பேணுவதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை.

ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதாவது 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் தூங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா ? ஆம், தனது வாழ்நாளை இரட்டிப்பாக அனுபவிப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த 40 வயதாகும் டைசுக்கே ஹோரி கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்களே தூங்குகிறார்.

வடக்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த ஹோரி தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், அதன் மூலம் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

நீண்ட நேரத் தூக்கத்தை விட ஆழமான குட்டித் தூக்கம் உங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் உதவும், உதாரணமாக மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் குறைந்த நேரம் ஓய்வெடுத்தாலும் அதிக ஊக்கத்துடன் செயல்படுகிறனர் என்று ஹோரி தெரிவித்துள்ளார்.

61 வருடமாக தூங்காத தாய் கோக்

வியட்நாமை சேர்ந்த 80 வயது தாய் கோக் [Thai Ngoc] என்பவர் கடந்த 61 வருடங்களுக்காகத் தான் தூங்கவே இல்லை என்று கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர்.

1962 இல் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அவர் அதன்பின் தனது தூங்கும் திறனை இழந்துவிட்டதாகவும், மருந்து மற்றும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )