கோழியின் இந்த பாகங்களை அதிகம் சாப்பிடாதீங்க
விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகையான இறைச்சி தான் கோழி.
என்ன தான் கோழியில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், பல வகையான வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இந்த சிக்கனை அதிகம் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பல மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக சிக்கனின் குறிப்பிட்ட சில பாகங்களை உண்பது மிகவும் ஆபத்தானது. இப்போது சிக்கனின் எந்த பாகங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
நுரையீரல்
கோழியின் நுரையீரலில் நிறைய ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். என்ன தான் கழுவி, அதை உயர் வெப்பநிலையில் வேக வைத்தாலும், அதன் சக்திவாய்ந்த எதிர்ப்பின் காரணமாக அந்த கிருமிகளை அகற்ற முடியாது. எனவே சிக்கன் நுரையீரலை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
கழுத்து
கோழியின் கழுத்துப் பகுதியை சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் கழுத்தில் நச்சுக்கள் மற்றும் கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. கழுத்துப் பகுதியை அடிக்கடி அதிகமாக உட்கொண்டால், அது புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இந்த பகுதியை உட்கொள்வதையும் தவிர்த்திடுங்கள்.
தலை
சிக்கன் பிரியர்கள் பலரும் அதன் தலையையும் சாப்பிடுவதுண்டு. ஆனால் தலையை எப்போதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதன் தலையில் மனித ஆரோக்கியத்தை அழிக்கும் சில ஆபத்தான பொருட்கள் குவிந்துள்ளன.
குடல்
கோழியின் குடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் உள்ளன. என்ன தான் அதன் குடலை சுத்தமாக கழுவினாலும், அதில் உள்ள நச்சுக்களை முழுமையாக அகற்ற முடியாது. முக்கியமாக சிக்கனின் குடலை உட்கொண்டால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை அதிகரிக்க செய்து, இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
கால்கள்
சிக்கனின் கால்களை அதிகம் உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் சிக்கனின் கால்களில் பல ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோன்களை அதிகம் எடுக்கும் போது, அது உடலின் ஆரோக்கியத்தை அழித்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.