உங்களுக்கு விரல்களில் தோல் உரியுதா ?
நம்மில் சிலருக்கு விரல் நுனிகளில் தோல் உரிவது போல் அல்லது சிவந்த நிறத்தில் காணப்படும். இவை தோல் அழற்சிக்கான ஒரு அறிகுறி.
இவை எதனால் ஏற்படுகின்றன?
கைகளில் அதிகம் கெமிக்கல் சார்ந்த வேலைகள் செய்வதால் இதுபோன்ற தோல் அழற்சி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இத் தோல் அழற்சி ஏற்படும்போது சருமத்தில் செதில்கள் உரிதல், ஒரு வித வலி, விரல் நுனிகளில் சிவத்தல் ஆகியனவும் ஏற்படும்.
டைஷிட்ரோடிக் எக்ஸிமா
தோல்களை சேதப்படுத்தும் இத உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் கொப்புளங்களை ஏற்படுத்தும். ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம்.
அதிகமான வியர்வையினாலும் ஏற்படும். இதுவொரு நாள்பட்ட நோயாகும். எனவே மருத்துவரை அணுகுவது நல்லது.
சொரியாஸிஸ்
சரும செதில்கள் உதிர்தல், சிவந்த புள்ளிகள், வறண்ட சருமம், கொப்புளங்கள் போன்றவை சொரியாஸிஸ் அறிகுறிகளாகும். இது கை,கால், உச்சந்தலை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அக்ரல் பீலிங் ஸ்கின் சிண்ட்ரோம்
இதுவொரு மரபியல் பாதிப்பு ஆகும். இது நபருக்கு நபர் வேறுபடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்தினால் ஏற்படுவது. தோல்களில் ஒருவித அரிப்பு, சிவந்து காணப்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கிறது.
ஹைப்பர்ஹைட்ரோசிஸ்
இது உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகமான வியர்வையை ஏற்படுத்தும்.
எக்ஸ்ஃபோலியேட்டிவ் கெரடோலிசிஸ்
இது கொப்புளங்கள் போல் தென்படும் சிறிய புண்கள் ஆகும். இது அதிகமான வெப்பம், வியர்வை, துணிகளால் ஏற்படும் உராய்வு, நீர்ச்சத்து குறைபாடு போன்றவற்றின் காரணமாக ஏற்படலாம்.