“தேர்தலில் வென்றால் பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை”

“தேர்தலில் வென்றால் பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை”

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிச்சிகனில் நடந்த குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப் “அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும். நான் 2 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )