தனிமையில் வாடும் முதியவர்கள்; 6 மாதங்களில் 37,000 பேர் உயிரிழப்பு

தனிமையில் வாடும் முதியவர்கள்; 6 மாதங்களில் 37,000 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் வயதானோர் அதிகமாக தனித்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தேசிய பொலிஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என்பதும், அவர்களில் 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதும் தெரியவந்தது.

மேலும், ,அந்நாட்டு தேசிய பொலிஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.

இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது. 130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )