55 வயதிற்குப் பின்னரும் வேதனம் – இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் யுத்தத்தினால் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 55 வயது வரை வேதனம் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் அவர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் வேதனமோ ஓய்வூதியக் கொடுப்பனவோ வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் அவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதையடுத்து அவ்வாறான சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிறுத்தப்படும் கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.