தேசியத்தை பாதுகாக்க திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக்க வேண்டும் !

தேசியத்தை பாதுகாக்க திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக்க வேண்டும் !

‘சட்டத்தின் ஊடாக இலங்கையை பிறிதொரு பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் போன்று மாற்றியமைப்பதை தடுப்பதற்கு தேசியத்துக்காக திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதன் பின்னர் பிரச்சினைகள் நிறைவடைந்துவிட்டது என்று கருதுவது முற்றிலும் தவறானது.’ என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேசிய
மூலோபாய கருத்திட்டம் வெளியீடு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க சட்டமூலம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 7 சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் சட்டம் இலங்கையில்தான் முதன்முறையாக இயற்றப்பட்டுள்ளது.

உலகில் எந்த நாடுகளிலும் இவ்வாறான சட்டங்கள் இயற்றப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘இனம்மற்றும் மத அடிப்படைவாதங்களை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெறும் முரண்பாடுகளை விசாரணை செய்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விரிவுப்படுத்தல்’ என ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவுக்கு அப்பாற்பட்டு அனுரகுமார திஸாநாயக்க சென்றுள்ளார்.

இடதுசாரி லிபரல்வாதிகளின் நிலைப்பாடு இன்று இவ்வாறு மாற்றமடைந்துள்ளது.

சட்டத்தின் ஊடாக இலங்கையை பிறி தொரு பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் போன்று மாற்றியமைப்பதை தடுப்பதற்கு தேசியத்துக்காக திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதன் பின்னர் பிரச்சினைகள் நிறைவடைந்துவிட்டது என்று கருதுவது முற்றிலும் தவறானது.

இலங்கையின் சுயாதீனம் மற்றும் இறையாண்மை இன்றும் அச்சுறுத்தல் நிலையில் காணப்படுகிறது.

உலகுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பாடம் கற்பிக்கும் அமெரிக்க
ஆசியாவில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு தமக்கு ஏற்றாட்போல் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளது.

பங்களாதேஷிலும் இலங்கையிலும் இவ்வாறான தன்மையே ஏற்பட்டது. ஆகவே நாட்டு மக்கள் தெளிவான தீர்மானத்தை எடுக்கவேண்டும்.’ என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )