தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது இன நல்லிணக்கத்தைச் சீர்கெடுக்கும் !

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது இன நல்லிணக்கத்தைச் சீர்கெடுக்கும் !

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம், வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பொது வேட்பளர் என ஒருவரை ஆதரிக்கும் யோசனை குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் நாட்டில் நடைபெற்று வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு வேண்டுமென்றே இடையூறு ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியின் கவனம் இனம் என்ற விடயத்தில் அல்ல, கொள்கைகள் மற்றும் தகுதிகளில் இருக்க வேண்டும் என்றும் காசிலிங்கம் வலியுறுத்தினார்.

இனப் பிளவுகளை வலியுறுத்துவது தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

‘தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், சாத்தியமான வீழ்ச்சிக்கு தென்னிலங்கையைக் குறை கூறக்கூடாது,’ என்று அவர் கூறினார்.

தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகளை எடுத்துக்காட்டிய அவர், ‘சாதாரண மக்களே இதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டார்.

தீவிரவாதத்தைத் தூண்டும் ஆபத்துக்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான அணுகு முறைக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், வடக்கிற்கு முதலீடுகளை ஈர்த்தல், பிராந்தியத்தை வர்த்தக மையமாக மாற்றுவது, உள்ளூர் பொருளாதாரம் போன்றவற்றை வலியுறுத்திய அவர், சமூகங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பிரி
வினையை வளர்க்ககூடாது என்றார்.

தனிநாடு என்ற தீவிர சித்தாந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து சமூகங்களுக்கும் நவீன மற்றும் அமைதியான இலங்கையில் அனைத்து சமு
கங்களும் வாழவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )