தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூடநாணய நிதிய உடன்படிக்கைக்கு பாதிப்பு இல்லை !
‘ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தற்போது ஆட்சியாளர் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள விரும்புகின்றார்களே தவிர புதிய வர்த்தகங்களை உருவாக்குவதற்கு விரும்பவில்லை.
விருப்பமான இடங்களில் வணிகங்களை ஆரம்பிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உதவி செய்யும்.
நாம் அரசாங்கத்தை மாற்றுவதற்கு அல்ல இந்த நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கே வாய்ப்பைக் கோருகிறோம்.
சர்வதேச நாணய நிதியம் ரணிலுடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்யவில்லை.
அதன் ஒப்பந்தங்கள் அனைத்தும் இலங்கை அரசுடனே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
எனவே, தாம் இல்லை என்றால் நாடு மீண்டும் பாதாளத்துக்குச் சென்றுவிடும் என ரணில் கூறுவது முற்றிலும் பொய்யான கருத்தாகும்.’- என்றார்.