கரும்புள்ளிகள் உங்கள் அழகைக் குறைக்குதா ?
முகம் பட்டுப்போன்று பிரகாசமாக இருந்தால்தானே அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும். இதனை போக்குவதற்கு இரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பர்.
உண்மையில் இக் கரும்புள்ளிகளை வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்துவிடலாம்.
மஞ்சள்
மஞ்சளில் இருக்கும் குர்குமின் எனனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. தினசரி குளிக்கும்போது கஸ்தூரி மஞ்சளை முகத்தில் தேய்த்து குளிக்கலாம்.
உறங்குவதற்கு முன்னர் ரோஸ் வோட்டருடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்துக்கு தேய்த்து 10 நிமிடங்களின் பின்னர் கழுவலாம்.
இதனால் முகத்திலுள்ள கரும் புள்ளிகள் நீங்கும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் அதிகளவான மருத்துவ குணங்கள் உள்ளன. இதிலுள்ள விட்டமின்கள், ஆன்டி அக்ஸிடன்ட் சருமத்தின் ஆழம் வரை சென்று இறந்த செல்களை நீக்கி சரும செல்களை புதுப்பிக்கும்.
நன்றாக முகத்தைக் கழுவிவிட்டு கற்றாழை ஜெல்லை பூசி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை நீங்கும்.
எலுமிச்சை சாறு
விட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை சாறில் இயற்கையாகவே ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. எலுமிச்சை பழத்தின் சாற்றை எடுத்து அதில் ஒரு கரண்டி தேன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை உலரவிட வேண்டும்.
பின்னர் முகத்தில் இலேசாக தண்ணீர் தெளித்து வட்டவடிவமாக மசாஜ் செய்துவிட்டு இளம் சூடான நீரில் கழுவலாம்.
வாரத்தில் இரண்டு தடவை இதனை செய்தால் முகத்திலுள்ள கருமை நீங்கும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. இதிலிருக்கும் என்சைங்களுக்கும் சருமத்திலுள்ள கருமையை போக்கும் தன்மை உள்ளது.
உருளைக்கிழங்கை துருவி அதன் சாற்றை எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். பின் மசாஜ் செய்து இளம் சூடான நீரில் கழுவிக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்து வர முகத்திலுள்ள கருமை நீங்கும்.