தனி நபரொருவரின் சுயநலத்துக்காக இரண்டாக பிளவுபடும் தமிழரசு கட்சி

தனி நபரொருவரின் சுயநலத்துக்காக இரண்டாக பிளவுபடும் தமிழரசு கட்சி

தமிழரசுக் கட்சி பிளவுபடுவதற்கு தனிப்பட்ட நபர் ஒருவரே காரணமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றாகவே பயணித்து வருகின்றன.

சில வேளைகளில் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் நிலவினாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் அனைவரும் ஓரணியாக செயற்பட்டு வருகிறோம்.

தற்போது ஜனாதிபதிதேர்தல் அறிவிக்கப்பட்டதுடன், தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தமிழர் தரப்பு பொது வேட்பாளருக்கான ஆதரவை இதுவரையும் வழங்கவில்லை.

அவர்கள் முதலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென பேசப்பட்ட போதும்
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பவர்கள் போல் கருத்துகளை பகிந்து வருகின்றனர்.

தற்போது தமிழரசுக் கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் இடம்பெற்று வருவதால், தமிழரசுக்
கட்சியை பிளவுபடுத்த ஒருவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நபரே, என்னையும் தமி
ழரசுக் கட்சியையும் பிரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்.

ஆகவே அரசியலில் எதுவும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்” எனத்
தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )