தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் 15 வேட்பாளர்கள் மாத்திரம் ஈடுபாடு !
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தியுள்ளனர் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் முன்னெடுத்த ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர்
மஞ்சுள கஜநாயக கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் சின்னங்களை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 39 வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.