குரங்கம்மையின் அறிகுறிகள்
1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளிலிருந்து குரங்கம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலக நாடுகளில் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தீவிரமான காய்ச்சல், உடல் வலி, கொப்புளங்கள் குரங்கம்மையின் அறிகுறிகள் என கூறுகின்றனர்.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு சரியாக ஒரு வாரத்தில் அதற்கான அறிகுறிகள் தெரியவரும்.
தும்மும் போது வெளிவரும் எச்சில், உடலிலுள்ள காயங்களை தொடுவதன் மூலம், குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருப்பவரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றுக்குள்ளான துணிகள், படுக்கைகள், உடலுறவு, பாதிக்கப்பட்ட விலங்குகள் போன்றவற்றினால் இந்நோய் பரவும்.
இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் ஏனையோரிடமிருந்து தனிமைப்பட வேண்டும்.
குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் வரையில் உயிரிழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.