டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரையில் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாளுமன்றத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தைக் கருத்திற்கொண்டு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இவ் வருடம் முழுவதும் இந்தியாவில் தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தால் கெஜ்ரிவாலுக்கு பிரசாரம் செய்ய பிணை வழங்குவது அரசியல்வாதிகளின் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இந்த வழக்கில் அமுலாக்கத் துறை வாதிட்டது.

இதற்கு, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி அவர் மீண்டும் சரணடைய வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததென அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால பிணை உத்தரவை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எதிர்வரும் 25ஆம் திகதி டில்லியில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 7 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )