ஜப்பானை தாக்கிய ஷான்ஷான் சூறாவளி
ஷான்ஷன் (Shanshan) சூறாவளி ஜப்பான் நேரத்தின் படி இன்று(29) காலை 8 மணியளவில் ககோஷிமா மாகாணத்தின் சத்சுமசெண்டாய் நகருக்கு அருகில் கரையைக் கடந்ததாக கூறப்படுகிறது.
மணிக்கு 252 km/h (157mph) வேகத்துடன் காற்று வீசுயதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கத்தினால் 70 வயதுடைய ஒரு தம்பதியினரும், 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உயிரிழந்ததுடன் ககோஷிமா மற்றும் மியாசாகி மாகாணங்களில் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுமார் 255,00 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ உட்பட மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை வார இறுதியில் புயல் நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
CATEGORIES World News