நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் ;வஜிர அபேவர்தன

நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் ;வஜிர அபேவர்தன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ரணில் தவிர்ந்த வேறு வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் சிவில் போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், மக்களுக்கு சேவையாற்றும் தலைவராக ரணில் விக்ரமசிங்க மட்டுமே காணப்படுகிறார்.

தேர்தலில் வெற்றிப்பெற ஏனைய வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும், அந்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை எனவும் கூறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே எல்லா சந்தர்ப்பங்களிலும்  வாக்களிப்பதாகவும், அது ஒரு தலைவரிடம் இருக்கக்கூடிய உயரிய பண்பாகும் எனவும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். 

வஜிர அபேவர்தன இந்த சிவில் போர் வெடிக்கும் என்ற கருத்தை பல பொது மேடைகளில் கூறிவறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )