சத்தான பாலக்கீரை தொக்கு
கீரைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. அந்த வகையில் பாலக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கின்றது. இதனால் அனிமீயா நோய் வராமல் தடுக்க முடியும்.
அந்த வகையில் பாலக்கீரை தொக்கு எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பாலக்கீரை – 2 கட்டு
- மிளகாய் தூள் – 2 கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
- வெங்காயம் – 1 (பெரியது)
- வெள்ளைப் பூண்டு – 2
- கடலைப் பருப்பு – 2 கரண்டி
- உளுந்து – 2 கரண்டி
- வரமிளகாய் – 4
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- கடுகு – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாலக் கீரையை சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
பின் பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகாய் தூள் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தேவையான அளவு கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
தொடர்ந்து அரைத்து வைத்திருந்த கலவையை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வெட்டி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு கிளறவும்.
கீரையின் நிறம் கரும் பச்சையாக மாறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சத்தான பாலக்கீரை தொக்கு ரெடி.