பாதாம்-பிஸ்தா குல்பி ஐஸ்க்ரீம்

பாதாம்-பிஸ்தா குல்பி ஐஸ்க்ரீம்

அனைவருக்கும் பிடித்த மிகவும் சுவையான பாதாம், பிஸ்தா குல்பி ஐஸ்க்ரீம் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • ப்ரெட் – 3
  • சீனி – 100 கிராம்
  • மில்க்மெய்ட் – 50 கிராம்
  • குங்குமப் பூ – ஒரு சிட்டிகை
  • பால் – ஒரு லீட்டர்
  • பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 2 கரண்டி
  • ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் ப்ரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுக்க வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றையும் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும்.

பால் காய்ந்தவுடன் அதில் சீனி, ப்ரெட், பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.

குங்குமப் பூவை பாலில் ஊறவைத்து அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஏலக்காய் தூள், மில்க்மெய்ட் ஆகியவற்றை சேர்த்து கிளறினால் கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்.

அத் தருணத்தில் அடுப்பிலிருந்து இறக்கி குல்பி அச்சு அல்லது கிண்ணங்களில் ஊற்றி வைத்தால் அருமையான பாதாம்,பிஸ்தா குல்பி ஐஸ்க்ரீம் ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )