சூறாவளியால் ஜப்பானில் மக்கள் வெளியேற்றம்
ஜப்பானில் சன்ஷான் சூறாவளி நாளை வியாழக்கிழமை (29) தெற்கு கியூஷுவை மிகவும் வலுவான சக்தியுடன் நெருங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சூறாவளி இதுவரை கண்டிராத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
ககோஷிமா மற்றும் மியாசாகி ஆகிய பகுதிகளில் ஆண்டு சராசரியை விட, கடந்த 48 மணி நேரத்தில் 1,100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன் இந்த பேரிடரால் சிலர் உயிரிழந்துள்ளதாவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டள்ளன.
CATEGORIES World News