மேற்குக் கரை முழுவதும் சோதனை நடத்திய இஸ்ரேல் இராணுவம்

மேற்குக் கரை முழுவதும் சோதனை நடத்திய இஸ்ரேல் இராணுவம்

காசாவின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (28) திடீரென மேற்குக் கரை மூழுவதும் பலத்த சோதனையில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சோதனையின்போது 9 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜெனின் நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7-ந் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதில் இருந்து தினந்தோறும் என்ற அடிப்படையில் இஸ்ரேல் சோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்த சோதனையின்போது அங்குள்ள போராளிக் குழுக்கள் இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெனின் நகர் ஆளுநர், கமல் அபு அல்-ரப் மருத்துவமனைகளுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் பாதைகளை இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெனின் மற்றும் துல்காரெம் நகரில் சோதனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல், மேற்கொண்டு ஏதும் தெரிவிக்கவில்லை.

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் அடிக்கடி துப்பாக்கிச் சண்டையை தூண்டும் இத்தகைய தாக்குதல்களின் போது பெரும்பாலானோர் இறந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )