காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை கண்டி நகரில் 50 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டியின் பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இருமல், சளி, பசியின்மை, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் குறுகிய கால சிகிச்சையைப் பெறுவதன் மூலம் நேரடியாக காசநோய்க்கு சிகிச்சை பெற முடியாது எனவும் இந்நோய் மேலும் பரவ வாய்ப்புள்ளதாக வைத்தியர் ஜெயசிங்க தெரிவித்தார்.
மேலும் அவர், கண்டி நகரைச் சுற்றி காசநோய் நிலைமை அதிகமாக காணப்படுவதால், மக்கள் முடிந்தவரை பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka