வெளி இடங்களுக்குச் சென்று சாப்பிடும் பொழுது இந்த பழக்கங்களை கடைபிடியுங்கள்
நாம் வீட்டில் உணவு உண்ணும்போது நம் விருப்பப்படி உண்ணலாம். அதை யாரும் கேள்வி கேட்கப் போவதுமில்லை குறை சொல்லவும் போவதில்லை.
ஆனால், பொது இடங்களில் நண்பர்களுடனோ அல்லது அறிமுகம் இல்லாத நபர்களுடனோ அமர்ந்து உண்ணும்பொழுது சில விடயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் அவசர அவசரமாக உண்ணக் கூடாது. இப்படி சாப்பிடுவதால் பிறர் மத்தியில் உங்கள் மரியாதை குறையும்.
அனைவருடனும் சேர்ந்து உணவு உண்ணும்போது சில வேளைகளில் பேச வேண்டிவரும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மற்றவர் பேசி முடித்ததன் பின்னர் பேசவும். இடைமறித்து பேசுவது அநாகரிகமானது.
உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை கூச்சப்படாமல் எடுத்து உண்ணுங்கள். அதைவிடுத்து அடுத்தவர் தட்டை பார்க்கக் கூடாது.
உணவை மெல்லும்போது வாயை திறந்து மெல்லக்கூடாது. உதடுகளை மூடி மெல்ல வேண்டும்.