பூசணிக்காய் சூப்
உணவே மருந்து என நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் நம் உடலில் ஏற்படும் சில நோய்களுக்கு உணவுகளையே மருந்தாக மாற்றலாம்.
அந்த வகையில் வயிற்றுப் புண்ணை சரி செய்யும் பூசணிக்காய் சூப் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்
- வெள்ளைப்பூண்டு – 2 பல்
- பட்டர் – ஒரு தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் – 4
- பால் – ஒரு டம்ளர்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- மிளகுத் தூள், சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கொத்தமல்லியை சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு சூடாக்கி, சிறிதாக வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கிய பின் 4 டம்ளர் நீர் விட்டு வேகவிடவும்.
பூசணிக்காய் வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு, பூசணிக்காயை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை காய் வேகவைத்த தண்ணீரில் கலக்க வேண்டும்.
தொடர்ந்து இதனுடன் பால், சீரகத்தூள், மிளகு சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.