ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமல் இருப்பது சிக்கலான நிலை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமல் இருப்பது சிக்கலான நிலை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜ நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட நடத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை.

இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் பத்து வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )