ராயன் திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியானது

ராயன் திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியானது

திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்த தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது

இப்பாடலிற்கு ‘அடங்காத அசுரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )