உதடுகளைச் சுற்றியுள்ள கருமையை போக்கனுமா ?
இந்த கோடைக்காலத்தில் அதிகமான பெண்களுக்கு முகத்தில் கண்களுக்கு கீழ் கருவலையம் உதடுகளை சுற்றி கருமை என பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், உதடுகள் இப்படி கருப்பாக மாறும்.
இப்படி கருப்பாக இருக்கும் உதடுகளை இயற்கை நிறமாக மாற்ற சில டிப்ஸ் உள்ளது. அவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு ஒரு நல்ல கிளன்சராக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள கருமையான திட்டுகளை தடுக்கிறது.
எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையான செல்களை தடுக்கிறது.
கற்றாழை
இது பழங்காலத்திலிருந்தே இருக்கும் ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம்.
இது சருமத்தில் சன் டேனை தடுக்கிறது. புதிய கற்றாழை சாற்றை எடுத்து முகம் மற்றும் உதடுகளைச் சுற்றி மசாஜ் செய்யவும். கற்றாழை ஜெல்லை தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். தொடர்ந்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
பால்
பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை இயற்கையாகவே வெண்மையாக்குகிறது. அதுமட்டுமின்றி சருமத்தை இளமையாக்கும்.
சருமம் நல்ல பொலிவு பெறும். உதடுகளைச் சுற்றியுள்ள கருமையைக் குறைக்கிறது. அதற்கு, சிறிது பச்சை பாலை எடுத்து உதடுகளைச் சுற்றி தடவவும். bஇன் அது நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், உதடுகளைச் சுற்றியுள்ள கருமையான சருமப் பிரச்சனை குறையும்.
நிலக்கடலை
கருமையான சருமத்தைத் தடுப்பதில் நிலக்கடலை சிறந்தது. இது சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை திறம்பட நீக்குகிறது. உளுந்து மாவு இரண்டு ஸ்பூன் மற்றும் மஞ்சள் ஒரு ஸ்பூன் எடுத்து. மேலும் சிறிதளவு பாலைக் கலந்து, பின் அதனை ஃபேஸ் பேக்காகத் தடவவும்.
இந்த பேஸ் பேக் உதடுகளைச் சுற்றி தடவி, உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.