மட்டக்களப்பில் 80 வீதத்துக்கும் அதிகமான வாக்கு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கே

மட்டக்களப்பில் 80 வீதத்துக்கும் அதிகமான வாக்கு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கே

நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவை முழு இலங்கையர்களும் ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக வழங்
கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை எதற்காக நாம் ஆதரிக்க
வேண்டுமென்பதை சிந்திக்க வேண்டும்.

நாடு இருளில் இருந்தபோது அதனை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்த தலைமைகளுக்கு மத்தியில் நாட்டிற்கு ஒரு வெளிச்சத்தை ஏற்றிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி முன்வந்தார்.

அதற்கு எமது மாவட்ட மக்கள் அவருக்கு நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தார். அனுரகுமார திசாநாயக்க பிரச்சினைகளை ஏற்படுத்திய தலைவராக காணப்பட்டார்.

ஆனால் யாருமே இதற்கான தீர் வுகளை கொண்டுவர முயற்சிக்கவில்லை.

இவ்வாறான கால கட்டத்தில் நாட்டை மீட்டெடுத்து பொருளாதாரத்தை கட்டி
எழுப்ப துணிச்சலாக முன் வந்தவரே தற்போதைய ஜனாதிபதி.

இதனால்தான் இன்று முழு இலங்கை மக்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் கூட எமது ஜனாதிபதியின் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )