நாளை முதல் தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

நாளை முதல் தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

தபால் வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் (26) தபால் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )