ஏராளமான நன்மைகள் அடங்கிய முருங்கை இலைப் பொடி
முருங்கை இலை, காம்பு, பூ,பட்டை, பிசின், காய்,விதை போன்ற அனைத்துமே மருத்துவ நலன்களைக் கொண்டது. அதேபோல் இந்த முருங்கை இலையிலிருந்து தயாரிக்கப்படும் முருங்கைப் பொடியிலும் பல நன்மைகள் உள்ளடங்கியுள்ளன.
முருங்கைப் பொடி எப்படி தயாரிப்பது?
முருங்கை இலையை காம்புகள், பூக்களை எல்லாம் தனியாக பிரித்து நிழலில் உலர்த்தி அல்லது வெயில் படாதவாறு வெள்ளைத் துணியொன்றில் இலையை பரப்பி அதன் மேல் இன்னொரு துணியை மூடி உலரவிட வேண்டும்.
நன்றாக உலர்ந்ததும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் மீண்டும் வெயில் படாதவாறு உலரவைத்து கண்ணாடி போத்தலில் போட்டு வைக்க வேண்டும்.
எப்படி சாப்பிடலாம் அல்லது குடிக்கலாம்?
தயிரில் முருங்கை இலைப் பொடியை கலந்து சாப்பிடலாம்.
ரசம் செய்து இறக்கும் நிலையில் இரண்டு தேக்கரண்டி முருங்கை இலைப் பொடியைத் தூவி இறக்கலாம்.
சூப் செய்தால் அதில் முருங்கைப் பொடியை சேர்க்கலாம்.
மிதமான சுடுநீரில் அரை தேக்கரண்டி முருங்கை இலைப் பொடியை கலந்து குடிக்கலாம்.
சுடு நீரில் முருங்கை இலைப் பொடியைச் சேர்த்து தேநீராகவும் குடிக்கலாம்.
சூடான சாதத்தில் முருங்கை இலைப் பொடி, நெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
முருங்கைப் பொடியின் நன்மைகள்
- புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.
- ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
- வயிறுக் கோளாறுகளை சரிசெய்யும்.
- இதயக் கோளாறுகளை தடுக்கும்.
- கல்லீரல் பிரச்சினையை சரி செய்கிறது.
- பக்டீரியா தொற்றுக்கு தீர்வளிக்கிறது.
- கண் பார்வை பிரச்சினைகளை சரி செய்கிறது.
குறிப்பு – ஏனைய மருந்துகள் உண்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப முருங்கைப் பொடியை எடுத்துக்கொள்வது நல்லது.