தன் பிள்ளைகளை போல மக்களை பாதுகாத்த ஜனாதிபதியே நாட்டின் தந்தை !

தன் பிள்ளைகளை போல மக்களை பாதுகாத்த ஜனாதிபதியே நாட்டின் தந்தை !

நாட்டில் ஏற்படும் முரண்பாடுகளால் காலத்துக்கு காலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன் நாடு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்ட போதும் ரணில் விக்ரமசிங்க தனித்து நின்று நாட்டின் பிரதமராகி பின்னர் ஜனாதிபதியாக தெரிவானார் என்பது சாதாரண விடயமல்ல இது ஆண்டவனின் தீர்ப்பு என்பதை நாம் மறந்துவிடமுடியாது என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

அனைவரது பிள்ளைகளையும் தனது பிள்ளைகளை போல அவர் பாதுகாத்திருக்கிறார். அந்த வகையில் அவரே இந்த நாட்டின் தந்தை என்றும் அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் தேசிய மாநாட்டில்
கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண் டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,


“நாடு நெருக்கடியிலிருந்த போது அந்நிலையிலிருந்து மீட்டு தற்போது இயல்பு நிலைக்கு நாடு திரும்பும் வகையில் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

சமையல் எரிவாயு நெருக்கடி ஏற்பட்ட போதும் ஒவ்வொரு சமையலறைக்கும் எரிவாயு சிலிண்டர் போய்சேரும் வகையில் வழிவகை செய்துள்ளார்.

ஆரம்பத்தில் டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்தில் அதிகளவான முஸ்லிம்கள் ஐ.தே.க.வில் இணைந்திருந்தனர். பின்னர் அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

கடந்த காலத்தில் தேசிய காங்கிரஸ் பல்வேறு அரசியல் தீர்மானங்களை எடுத்தது. சில சமயங்களில் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவும் முடிவுகளை எடுத்துள்ளது.

ஆனால் இப்போது அவருடன் நாட்டுக்காக இணைந்துள்ளது. நாட்டின் தற்போதைய ஜனாதிபதி சாதாரணமான ஒருவரல்ல.

யாரும் முன்வராத நிலையில் தாய் நாட்டை காப்பாற்ற வந்த தலைவர் அவர்.

இன்றிருக்கும் தலைவர்களில் நாட்டை பற்றி முழுமையாக தெரிந்தவர் நமது ஜனாதிபதி.

நாட்டை சுபீட்சமாக எதிர்காலத்துக்கு கொண்டு செல்லக்கூடிய தலைவரே நாட்டுக்கு தேவை.

டி.எஸ்.சேனாநாயக்கவுக்கு பின்னர் அனைத்து மக்களும் இவரையே நம்பியுள்ளனர்” என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )