தெரிவான சகல ஜனாதிபதிகளுமே தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் !
கடந்த காலங்களில் நாட்டில் 8 ஜனாதிபதிகள் தேர்தல்கள் மூலமாக பதவிக்கு வந்தார்கள் , இவர்கள் சிங்கள மக்களுக்கான – சிங்கள ஜனாதி பதிகளாகவே நடந்து கொண்டார்கள். தமிழர்களுக்கு மேலதிகமாக பிரச்னைகளை உருவாக்கினார்களேயன்றி இனப்பிரச்னையை தீர்க்கவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலும், இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இலங்கையில் 1978இல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்நாட்டில் 8 ஜனாதிபதிகள் தேர்தல்கள் மூலமாக பதவிக்கு வந்தார்கள்.
இவர்கள் சிங்கள மக்களுக்கான சிங்கள ஜனாதிபதிகளாகவே நடந்துகொண்டார்கள்.
தமிழர்களுக்கு மேலதிகமாக பிரச்னைகளை உருவாக்கினார்களேயன்றி, இனப்
பிரச்னையைத் தீர்க்கவில்லை.
அந்த வகையில், 46 ஆண்டு காலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட 8 ஜனாதிபதிகளும் இடைக்காலத்துக்காக பாராளுமன்றத்தால் தெரிவு
செய்யப்பட்ட இரு ஜனாதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.
தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி ரணில் அவர்கள் கல்முனை வடக்குப்
பிரதேச செயலகம், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்னைகளைக்கூட தீர்க்கவில்லை.
இதற்கான மக்களின் அறவழிப் போராட்டத்தை அவர் மதிக்கவில்லை.
இப்போது கூட அவரால் அந்தப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும்.
சட்டவிரோதமாக குடியேறிய அயல் மாவட்ட குடியேறிகளைக்கூட ஜனாதி
பதியால் வெளியேற்ற முடியவில்லை.
மேலும், இனப்பிரச்னைக்கான நிரந்தர தீர்வுக்கான திட்டம் ரணில், சஜித், அநுர
ஆகியோரிடம் இல்லை.
இப்படியிருக்க, அதனை நன்கறிந்த பின்பும் சில்லறை யான சலுகைகள் அல்லது
எதிர்காலத் தனிப்பட்ட தேவைகள் அல்லது நட்புக்காக தமிழர்கள் எந்த வகையில்
வாக்களிக்க முடியும்.
இவர்கள் ஜனாதிபதியானால் தரக்கூடியது இருவர் அல்லது மூவருக்கான அமைச் சர்,
இராஜாங்க அமைச்சர் பதவிகள் மட்டுமேதான்.
அதன் பின்னர் கூட்டுப் பொறுப்பு என்ற கட்டுக்குள் இருந்து கொண்டு தலையாட்டிக் கொண்டு, சிறீலங்கா அரசுக்கா கவும், அந்த அரசாங்கத்துக்கா கவும்
செயல்படவே முடியும்.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் இனப் பிரச்னைக்கான தீர்வு பற்றிச் சிந்திக்கவும் முடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்தார்.