சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கு மைத்திரிபாலவே முழு பொறுப்பு !
சுதந்திர கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூறவேண்டுமென, அக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், சாரதி துஸ்மந்த ஆகியோர் ஜனாதிபதி ரணிலுக்குதமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் நாம் கவலையடைகின்றோம். அவர்களின் கட்சி தாவல் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறானோருக்கு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு, முன்புவரம்பு காணப்பட்டது.
அந்த வரம்பு தற்போது மீறப்பட்டுள்ளது. சுதந்திர கட்சிக்கு நேர்ந்
துள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே
பொறுப்பு கூறவேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மக்களை திரட்ட முடியவில்லை. எதிர்க்கட்சி
தலைவர் சஜித் பிரேமதாஸவால் மாத்திரமே ஜனநாயக ஆட்சி முறைமையை ஏற்படுத்த
முடியும் ‘- என்றார்.