ரணில், சுமந்திரன் சூழ்ச்சியாலேயே மாகாண சபை தேர்தல் பிற்போனது !

ரணில், சுமந்திரன் சூழ்ச்சியாலேயே மாகாண சபை தேர்தல் பிற்போனது !

கடந்த காலத்தில் மாகாண சபை தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனுமே செயல்பட்டார்கள் என்றுதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார் .

கட்சிப் பணிமனையில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் தமது அதிகாரங்களை நிலைநிறுத்துவதற்காகவே செயல்படுகின்றார்கள்.

ஒன்றையாட்சி கட்டமைப்பின் மூலமே இந்த நாட்டை உயர்த்திவிடுவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கூறியமை ஓர் ஏமாற்று நடவடிக்கை.

இதேநேரம், போரின் முடிவில் சரணடைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக தோன்றியுள்ளது.

எதிர்வரும் 30 ஆம்திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு பூரண ஆதரவை வழங்குகிறோம்.

இந்தப் போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன்அழைப்பு விடுத்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )