பணியாற்றாத ஊழியருக்கு சம்பளம் வழங்கியவர் கைது
களுத்துறை, நேபட பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான அரச தோட்டமொன்றில், பணியாற்றாத ஊழியர் ஒருவருக்கு மாதக்கணக்கில் சம்பளமாக ஆறு இலட்சம் ரூபாவை செலுத்தி வந்த தோட்ட நிர்வாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வரக்காகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் ஊழியர்களுக்கு 2024 ஜூலை மாத சம்பளம் வழங்குவதில், அதிக செலவு செய்தது தொடர்பாகத் தோட்ட நிறுவனத்தின் கணக்குத் துறையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பணியில் ஈடுபடாத ஒருவரின் பெயரில் 2023 நவம்பர் முதல் 2024 ஜூலை வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளுக்கு பின்னர் உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.