கண் திருஷ்டியைப் போக்கும் துளசி செடி
மூலிகைகளின் ராணி என அழைக்கப்படும் துளசியை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகுவதோடு குடும்பத்துக்கு பல்வேறு நன்மைகள் வந்து சேரும்.
அந்த வகையில் வீட்டில் துளசிச் செடி வைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் எனப் பார்ப்போம்.
ஆரோக்கியமான வீடு – துளசிச் செடியை வீட்டில் வைத்தால் அது காற்றைச் சுத்திகரித்து சுற்றுச்சூழலை புதிதாக வைத்திருக்கிறது.
அதிர்ஷ்டம் – பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி வீட்டில் பொருளாதார நிலை சீராகும்.
பாதுகாப்பு – கண் திருஷ்டி, சூனியங்களிலிருந்து விடுபட வீட்டில் துளசி செடி வைக்க வேண்டும்.
எதிர்மறை ஆற்றலை தடுக்கும் – துளசிச் செடிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும். துரதிரஷ்டத்தைத் துரத்தும்.
எந்த இடத்தில் வைக்கவேண்டும்?
துளசிச் செடியை கிழக்கு திசையில் வைத்தால் சிறப்பாக இருக்கும். இதனை ஜன்னலுக்கு அருகில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம்.
செடிக்கு அருகில் காலணிகள், துடைப்பங்கள், குப்பைகள் ஆகியவை இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடியைச் சுற்றி சுத்தமாக இருக்க வேண்டும்.
செடிக்கு தேவையான அளவு வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
செடி காய்ந்துவிட்டால் உடனடியாக வீட்டுக்கு வெளியே வைக்கவும்.