எதிர்வரும் 5 வருடங்களுக்கு ரணிலிடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் முடிவு!
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்தலில் வெறுப்பு, தற்பெருமை அரசியலை நிராகரித்து உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தை வழங்க இந்நாட் டின்
புத்திசாலித்தனமான மக்கள் தீர்மானித்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல்
லான்சா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாம் தலைமை வகித்த அனைத்து விடயங்களையும் வென்றெடுத்துள்ளோம்.
மக்களுடன் களத்தில் இருப்பவர்களை அரசியலில் முன் னோக்கிக் கொண்டு வரவேண்டும்.
மக்களுக்கு உதவாதவர்களைக் கொண்டு வருவதன் மூலம் மக்களும் நாடும் பின்னோக்கிச் செல்லும். கிரா மத்தையும், நகரத்தையும், நாட்டையும்
யாரால் கட்டியெழுப்ப முடியும், ரணிலைத் தவிர வேறு எவராலும் இந்த நாட்டைக்
கட்டியெழுப்ப முடியாது.
கோட்டாபயவை அழைத்து வந்தபோதும் அவரை அழைத்து வர வேண்டாம் என்று கூறினோம்.
எனினும் அவர் தேர்தலில் களமிறக்கப் பட்டதால் அவருக்காக நாமும் வேலை செய்தோம் ஆனால் இறுதியாக அவர் மக்களால் துரத்தப்பட்டார்.
எனவே இந்தநாட்டை யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
சஜித் பிரேமதாஸவால் அதனை செய்ய முடியுமா? அவருடன் நெருங்கிப் பழகுபவர்களின் கதைகளைக் கேட்கும்போதும், அவர் எப்படி அமைச்சைக்கையாண்டார் என்பதைப் பார்க்கும்போதும், அவரால்
நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது புரியும்.
வேலை செய்யாதவர்கள், தொழில் தொடங்காதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் ஒரு
நாட் டைக் கட்டியெழுப்ப முடியாது.
இந்நாட்டின் நிலைமைக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் தொடர்பு வைத்திருக்கும்
ரணில் விக்கிரமசிங் கவை தவிரவேறு யாராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.
அதனால் தான் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்
கள் அவருடன் இணைந்துள்ளனர்.’ என பாராளுமன்ற உறுப்பினர் நிமல்
லான்சா தெரிவித்தார்.