சட்டத்தை புறக்கணிக்கும் அரசாங்கம் ஆபத்தானது !
சட்டத்தை நிலைநாட்ட முடியாத அரசாங்கத்தால் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சட்டத்தை புறக்கணிக்கும் அரசாங்கம் திறமையற்றது மாத்திரமல்ல அது ஆபத்தானது எனவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டுள்ள பதிவில் அவர்
இதனை கூறியுள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவதுபொலிஸ்மா அதிபர் நியமனம்,வி.எவ்.எஸ் ஆகியவற்றுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், உள்ளுராட்சித் தேர்தலை நடத்தாம லிருப்பதன் மூலம் அடிப்படை உரிமை களை மீறியுள்ளது என்ற தீர்ப்பு ஆகியன உயர்நீதிமன்றத்தின் வெளிப்படையான அப்பட்டமான எச்சரிக்கைகள்.
சட்டத்தை நிலைநாட்ட முடியாத அரசாங்கத்தினால் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியாது.
இது நமது ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் கட்டமைப்பையே சிதைக்கின்றது.
இந்த சட்டமின்மை எங்களின் பொருளாதாரம், சமூகம் எங்களின் எதிர்காலம்
ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்னர் நாங்கள் செயற்பட
வேண்டும். இது முன்னெடுக்க தகுந்த ஒரு போராட்டம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.