கடற்றொழிலாளர்களுக்கு விசேட உதவித்தொகை!
கடற்தொழிலாளர்கள் தமது தொழிலுக்கு பயன்படுத்தும் எரிபொருளுக்கு லீற்றருக்கு 25 ரூபாவை உதவித்தொகையாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று இடம்பபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கிராமிய கடற்றொழில் சங்கங்களின் சிபாரிசுக்கு இனங்க கடற்றொழில் பரிசோதகர்கள் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கடற்றொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டம் உடனடியாக அமுலுக்கு வரவுள்ளதாகவும். அத்துடன் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு மேம்பாட்டு பணிகளுக்காக அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கமைய 11 மில்லியன் ரூபாவை அமைச்சரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
CATEGORIES Sri Lanka