கட்டணம் செலுத்தாமல் தொட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
தமது அனுமதியின்றி அல்லது உரிய கட்டணத்தைச் செலுத்தாமல் தேர்தல் பிரசாரத்திற்காக நகர வீதிகள் அல்லது பொது இடங்களை அலங்கரிக்கும் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை (CMC) நேற்று (21) எச்சரித்துள்ளது.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் ஜூலை 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டவுடன், இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரப் பொருட்களால் தலைநகரை அலங்கரிக்கும் போது தேர்தல் சட்டத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நினைவூட்டி கடிதம் அனுப்பியதாக மாநகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நகரை அலங்கரிக்க விரும்பும் எந்தவொரு வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியினரோ அவர்களிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற வேண்டும் அல்லது அத்தகைய பிரச்சாரப் பொருட்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அகற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
“தேர்தல் பிரசாரப் பொருட்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளிப்படையான அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், கொழும்பு நகரை அலங்கரிப்பதற்கான விதிமுறைகள் குறித்து 80க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்” என்று ஜெயவர்தன கூறினார்.