“சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடும்“
“சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடும். கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்ந்தது என்பதை சஜித் பிரேமதாஸ அறிய முயலவேண்டும்.“என தலதா அத்துக்கோரள நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் .
பாராளுமன்றம் நேற்று (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. அதன்போது விசேட உரையை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “எம்முடைய தாய்க்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதித்தலைவரும் அரசியில் எதிரிகளாகியுள்ளனர். தற்போது இருவரும் ஜனாதிபதியாக போட்டியிடுகின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய பின்னணியில் இவ்வாறு பிளவுபட்டுள்ளமையினால் எந்த சாராருடனும் இணைந்து செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நாடு தொடர்பில் சிந்திக்காது இத்தகைய தீர்மானத்தை எடுத்துள்ளார்கள் என்பது என்னுடைய நிலைப்பாடாகும்.
இது எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் அல்ல. இத்தகைய பின்னணியில் எனக்கு வாக்களித்த இரத்தினபுரி மக்களுக்கு துரோகம் இழைக்க நான் தயாராகவில்லை. அத்துடன், பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் எதிர்காலத் திட்டங்களை திறம்பட முன்னெடுக்க என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள நேற்று (21) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.