சஜித் அமைச்சராக இருந்த போதே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது !

சஜித் அமைச்சராக இருந்த போதே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது !

எமது சகோதர இனமான கிறிஸ்தவ சமூகம் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தமைக்கு, அனைத்து அரசியல் தலைமைகளும், அன்று ஆளும்தரப்பாக இருந்து தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர்
எம். முஸ்தபா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாஸ, அக்காலத்தில் ஆளும் தரப்பில் ஒரு அமைச்சர்.

இன்று ஜனாதிபதி வேட்பாளராக இருந்துகொண்டு நீதியை நிலைநாட்டப் போவதாக கூறும் அவர் உட்பட பொறுப்பு கூற வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

நாம் ஜனாதிபதியுடன் செய்த ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில், எதிர்வரும் காலங்களில் இன,மத, பேதமற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தையும் அதற்கான கள நிலைமையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் சில அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு நாட்டில் பல அசம்பாவிதங்கள் நடத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா ஜனநாயககட்சி, ஏனைய கட்சிகளைப் போன்று சமூக விடயங்களை மழுங்கடித்து நாட்டை சீரழிக்காது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஜனாதிபதியின் தரப்பு ஆதரவாக இருக்கிறது.

அத்துடன் மக்களின் நிலப் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியுள்ளோம்’ என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )