இனம், மதம், மொழி , வேறுபாடுன்றி நாட்டு நலன் கருதி செயற்பட வேண்டும் !
ஜனாதிபதி தேர்தல், இனம், மதம் மற்றும் மொழி வேறுபாடுகளை பார்த்து வாக்களிக்கக்கூடிய தேர்தலல்ல எனவும், அனைவரும் நாட்டு நலனை மையப்படுத்தி
சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோது, இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து எழுந்துகொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளோம்.
அரசியல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர் போட்டியிடும் ஓர் தேர்தலாக
இத் தேர்தல் காணப்படுவதுடன் வழமைக்கு மாறாக பலத்த போட்டியும் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது.
மூவின மக்களும் சந்தோஷமாக, நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கு
வதே இப்போதைய எமது தேவை.
இதனை நாட்டு மக்களும் அறிந்துள்ளார்கள் , அதனை ஏற்படுத்துவதற்கான
ஓர் தலைமையை உருவாக்குவதற்கான தேர்தலாகவே இத்தேர்தலை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அந்த தலைமைக்கு தகுதியானவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச என்பதை இப்போது முழுநாடும் அறிந்துள்ளது.’ என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.